window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

நாட்டுப்புறக் கலைவிழா – 2020

Home>Events>Sangam Events>நாட்டுப்புறக் கலைவிழா – 2020
Loading Events
This event has passed.

ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் தமிழ் அமைப்புகள் இணைந்து வழங்கும்
நாட்டுப்புறக் கலைவிழா – 2020

மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாய்த் திகழும் பல்வேறு கலைகளுள், நாட்டுப்புறக்கலைகள் ஓர் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை மண் வாசனை மாறாமல், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வாழ்வியலோடு கலந்து, எல்லோருக்கும் புரியும் எளிய வகையில் எடுத்துரைக்கும் களமாக பல்லாயிரம் ஆண்டுகளாய்த் திகழ்கின்றன.
காலத்தின் கோலத்தாலும், நவீனமயமாதலாயும், நலிந்து வரும் நம் நாட்டுப்புறக்கலைகள், கொரோனாவின் கோரப்பிடியிலும் சிக்கியுள்ளது. கலைநிகழ்ச்சிகள் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கலைஞர்களுக்கு உதவிடும் வகையில், நம் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து “நாட்டுப்புறக் கலைவிழா – 2020”-வை ஏற்பாடு செய்துள்ளோம். கடல் கடந்து வளரும் தலைமுறைகளும் நம் கலைகளை அறியட்டும், உம் நன்கொடைகள் நம் கலைஞர்களை வாழ்விக்கட்டும்.
நேரலை இணைய முகவரி : https://youtu.be/Tk540Ii20zw
Go to Top