தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம்!
எதிர் வரும் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நமது தமிழ் மன்றம் உற்சாகத்துடன் செயல் பட வேண்டி நமது தமிழ் மன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது. பொங்கல் சிறப்பு தமிழ் மன்ற கூட்டம் மெய்நிகர் வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்திப்பு நாள் – ஞாயிறு, 03.01.2021
சந்திப்பு இடம் – மெய் நிகர் வாயிலாக.
நிகழ்ச்சி நிரல்:
- தொடக்கவுரை
- மரபு கவிதைக்கு இயல்பு தமிழில் விளக்கம்
- ஓர் தலைப்பு ஓர் உரை
- யான் சுவைத்தது – புத்தகம், கவிதை, கட்டுரை
- எனது படைப்பு – கவிதை, கட்டுரை, உரை நடை
- எனது படைப்பு – கவிதை, கட்டுரை, உரை நடை
- சின்னதாய் ஒரு தகவல்
- நன்றிவுரை
இதில் பங்கேற்க விரும்புவோர் mts.events.info@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். மேல கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் உங்கள் பேச்சு இருக்கு வேண்டும். உங்கள் பேச்சு 6 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் மேல கொடுக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒரு தலைப்பின் கீழ் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு நபர் பேச வாய்ப்பு அளிக்கப்படும்.
வாருங்கள் தமிழ் பேசுவோம்.. 🙏
தமிழ் மன்றம் ஒருங்கிணைப்பாளர்கள்.