window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

தமிழ் மன்றத்தின் முதல் சந்திப்பு

Home>Events>Sangam Events>தமிழ் மன்றத்தின் முதல் சந்திப்பு
Loading Events
This event has passed.

தமிழ் மன்றம்

கடல் கடந்து வாழும் முன்சென் தமிழ் சமூகம் தமிழ் பழக அதில் சிறக்க முன்சென் தமிழ் சங்கத்தால் தொடங்கப்பட்டதே தமிழ் மன்றம்.
தமிழ் ஆர்வலர்களின் திறமையை வெளிப்படுத்தவும், மொழி வளத்தை பெருக்குவதும் இம்மன்றத்தின் நோக்கம்.

செயல்பாடுகள் :

புத்தக மன்றம்:
உறுப்பினர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை பற்றி விவாதிக்கலாம்.
பேச்சாளர்கள் மன்றம்:
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் தங்கள் படைப்புகளை உருவாக்கலாம். இந்த படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும். இவை கட்டுரை, கதை, சிறுகதை, கவிதை, என எந்த வடிவிலும் இருக்கலாம்.
வாரம் ஒரு தலைப்பு:
ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைப்பு வழங்கப்படும். வார இறுதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் ஒரு கட்டுரை, கதை, சிறுகதை, கவிதை, என எந்த வடிவிலும் தங்களது படைப்புகளை இயற்றி வாட்ஸ்அப் குழு அல்லது வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளலாம்.
வலைப்பதிவு:
தனது படைப்புகளை வலைப்பதிவுகளாய் நமது இணையதளத்தில் பதிவேற்றலாம்.

 

தமிழ் மன்றத்தின் முதல் சந்திப்பு 23.02.2020 காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.
இடம்: அறை எண் : 108

EineWeltHaus Munchen e.V
Schwanthaler strasse 80,
80336 München.

 

நிகழ்ச்சி நிரல் :
10:30 -10:45 : அறிமுக உரை
10:45 – 12:15 : மன்ற உறுப்பினர்களின் உரை
12:15 – 12:30 : அடுத்த சந்திப்பு பற்றிய திட்டமிடல்

உறுப்பினர்கள் தாங்கள் பேச விரும்பிய தலைப்பில் 10 நிமிடம் தமிழில் பேச வாய்ப்பு அளிக்கப்படும். கவிதை, கதை, கட்டுரை, நூல் மதிப்புரை என எல்லா வடிவங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

தாங்கள் பேச விரும்பும் தலைப்பை muenchentamilsangam@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
தாங்கள் அனைவரும் இந்த முயற்சியில் பங்காளிப்பீர் என்று நம்புகிறோம்.

Go to Top