window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

தமிழ் மன்றம்

Home>Posts>தமிழ் மன்றம்

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்

வான் நிலவே வளர் பிறையே புல் வெளியே வெண் பனி மழையே இயங்கிய காலம் உறங்கி கிடந்து மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து இருக்கும் போது மறந்த உண்மை இறக்கும் போது உணர பெற்ற கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கருப்பை விடுத்த நொடி முதல் இருப்பை தேடி திரியும் உலகில் தவழ்ந்து துவண்டு எழுந்திட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்2021-01-24T20:09:24+01:00

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்

வருது வருது தமிழ் தையது வருது கிழிஞ்சு போன மனுச மனச தச்சு சேக்க தய்யி வருது நஞ்சு போன பொழப்பயெல்லாம் நிமித்தி வெக்க தய்யி வருது மனுச ஜாதி வெதைச்சு வெச்ச வம்பெல்லாம் வெனையாக வெதையெல்லாம் பயிராச்சு வைரஸா உயிராச்சு உசுரான நாள் மொதலா உசுரெடுக்க ஆர்மபிக்க ஊரெல்லாம் முடங்கி போச்சு துக்கத்துல தூக்கம் போச்சு கம்மா நெறஞ்சு காடு வெளைஞ்சு மண்ணுல போட்டதெல்லாம் மச மசன்னு வளந்து
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்2021-01-24T18:24:28+01:00

தண்ணி தேடும் தரிசு நெலம்

முக்கடலின் சந்திப்புல முத்தா ஒரு ஊரு முன்னோரின் கலைய சொத்தா பாக்குற ஊரு வீரமும் தீரமும் மண்ணோடு உறைஞ்ச ஊரு ஆட்டமும் பாட்டமும் பண்பாட்டுல கலந்த ஊரு. தித்திக்கும் தமிழ் பேசுற தென்னாடு ; நாட்டுப்புற கலையில தல சிறந்த எங்க தமிழ்நாடு காதல கதையா, களவிய கவிதையா வீரத்த நாடகமா, வெற்றிய ஆட்டமா நாகரீகத்த நயமா நாலு பேருக்கு சொன்ன கூட்டம். சந்தோஷத்துக்கு பாட்டு, சங்கடத்துக்கும் பாட்டு உழவுக்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தண்ணி தேடும் தரிசு நெலம்2020-12-14T20:29:37+01:00

போதியின் கீழ் பேதையவள்…

எழும் அலை எல்லாம் கரை காண்பதில்லை கரை காணும் அலையாவும் கதை கேட்பதில்லை விழும் மழை எல்லாம் நிலம் சேர்வதில்லை நிலம் சேரும் நீரெல்லாம் வேர் நனைப்பதில்லை துளிர்க்கும் மொட்டெல்லாம் மலர்ந்து மகிழ்வதில்லை மலரும் மலரெல்லாம் மகரந்தம் தருவதில்லை சிந்தும் கண்ணீர் எல்லாம் சோகம் கரைப்பதில்லை கரைந்த சோகம் எல்லாம் மறைந்து போவது இல்லை கற்பனைக்கெட்டியது எல்லாம் கலையாவதில்லை கலையானவை எல்லாம் நிலை கொள்வதில்லை உதிர்ந்த உதிரம் எல்லாம் உயிராய்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

போதியின் கீழ் பேதையவள்…2020-12-14T20:14:33+01:00

பேராற்றல்

ஐந்தாவது பாட ஏடு என் கையில் முதல் பக்கம் நம் தேச தந்தை அறியாமை பாவம் என்றார். நிறைய பிழைகள் செய்தேன் அறியா வயது என்றாள் அன்னை. அகவை நாற்பதை கடந்தேன் என் மகன் பிழைகள் புரிய என் மனைவி அறியா வயது என்றாள். பேராசிரியர் என கல்லூரி அழைத்தது என்னை கெட்டிக்காரன் என பெருமிதம் கொண்டாள்  அன்னை. கணவன் அறிவாளி என கர்வம் கொண்டாள் மனைவி. பிணி மூப்பு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

பேராற்றல்2020-06-23T14:38:28+02:00

ஞானாம்பிகை

அம்பிகையின் சன்னிதி இருபது வயது எனக்கு கனவு நிறைந்த கண்கள் மனம் விரும்பும் மணாளன் வேண்டினேன். பத்து வசந்தங்களுக்கு பின் அவள் முன் மீண்டும் நான் உணர்ச்சி பெருக்கில் கன்னங்களில் கண்ணீர் வழிய குழந்தை செல்வம் வேண்டினேன். அரை சதம் அகவை அடைந்தேன் ஆரோக்கியம் வேண்டினேன். பத்து வசந்தங்களுக்கு பின் மீண்டும் அவள் சன்னிதியில் நான் வேண்ட கரங்கள் நீளவில்லை. அம்பிகை கொடுக்க மறுத்தாளா ? இல்லை பெற்று சலித்தேனா
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ஞானாம்பிகை2020-06-23T14:38:34+02:00

உச்சம்

கணேஷ் தன் நண்பனை சந்திக்க திட்டமிட்ட நேரத்தில் பழமுதிர்சோலைக்கு வந்தான். கண்ணாடியில் பார்த்து தலை சீவி கொண்டான். ஒரு வெள்ளிக்கோடு அவன் நாற்பதை தொட்டதை நினைவூட்டியது. ரமேஷ் வர நேரம் ஆனது. அருகில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தான் கணேஷ். அங்கே யாரோ பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். 'வாழ்க்கை வாழ்வதற்கே. நல்லதும், அல்லதும் அனுபவிப்பதற்கே உடல் தரித்தோம். ' அவரின் சொற்கள் காதில் விழுந்தது. கணேஷ் தரிசனம் முடித்து பிரகாரத்தில் அமர்ந்தான்.
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

உச்சம்2020-06-23T14:38:42+02:00

கண் கெட்ட பின்…

காலையில் ஆறு வயது பைரவியை வேகமாக பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்தாள் தேவி. பைரவி - அம்மா, நான் எதுக்கு ஸ்கூலுக்கு போகணும்? அம்மா - படிக்க கண்ணு பைரவி - எதுக்கு படிக்கனும்? அம்மா - அப்போ தான் வாழ்க்கை புரியும். பைரவிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. ஸ்கூலுக்கு போனாள். தேவி வீட்டு வேலை முடிந்ததும் ஆயாசமாக சோபாவில் சாய்ந்தாள். சிந்தனை குதிரை ஓட ஆரம்பித்தது. உண்மையில் பள்ளியோ, கல்லூரியோ எனக்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

கண் கெட்ட பின்…2020-06-23T14:38:49+02:00

நட்பு…

உன்னதமான நட்புக்கு ஓரிரு உதாரணங்கள் ....முகக்கண்ணாடியாய் இருக்கும் நட்பு,பொய் அகற்றி, உண்மையை மட்டும் உணர்த்தும்... நிழலாய் நிற்கும்நட்பு,நம்மை விட்டு அகலாமல் தொடரும்...சொந்தமின்றி வாழும் உறவுண்டு,நட்பின்றி வாழும் உயிரேது?கதவை திறந்தால்காற்று வரும்..மனதை திறந்தால் நட்பு மலரும்...உன்னத நட்பை கண்ணாடியாய் பிரதிபலித்து,நிழலாய் தொடர்வோம்....

நட்பு…2020-06-23T14:38:55+02:00

என் பெயர் இனியவன்

என் வாழ்வில் நாட்கள் நத்தை போல் நகர்ந்த அந்த கோடை காலத்தில் குளிர் தென்றலாய் என்னை வருடி சென்றாள் அவள். பாலையில் தண்ணீர் தேடும் யாத்திரீயாய் தொடர்ந்தேன் அவளை. ஒரே மாதத்தில் எல்லாம் மாறி போனது. என் கனவுகளில் அவள், என் முன்னே அவள் , எங்கு நோக்கினும் அவளின் சிரித்த முகம். கோவிலில் அம்மனுக்கு எப்படி முகம் மாறியது ? காதல் பித்து. அவளின் குரலின் இனிமையில் இசையை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

என் பெயர் இனியவன்2020-06-03T22:42:45+02:00
Go to Top