window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

வாரம் ஒரு தலைப்பு

Home>Posts>வாரம் ஒரு தலைப்பு

நட்பு…

உன்னதமான நட்புக்கு ஓரிரு உதாரணங்கள் ....முகக்கண்ணாடியாய் இருக்கும் நட்பு,பொய் அகற்றி, உண்மையை மட்டும் உணர்த்தும்... நிழலாய் நிற்கும்நட்பு,நம்மை விட்டு அகலாமல் தொடரும்...சொந்தமின்றி வாழும் உறவுண்டு,நட்பின்றி வாழும் உயிரேது?கதவை திறந்தால்காற்று வரும்..மனதை திறந்தால் நட்பு மலரும்...உன்னத நட்பை கண்ணாடியாய் பிரதிபலித்து,நிழலாய் தொடர்வோம்....

நட்பு…2020-06-23T14:38:55+02:00

தேர்வும், தோல்வியும்

கொம்பில் படர்ந்த கொடி தளிர் விட்டு பூத்து குலுங்கும் வேளையில் கொம்பு நகர்ந்தது, என்ன அதிசயம்? கொம்பு அல்ல, மலை பாம்பு அது!!! கொடி துவண்டது. மழைக்காலம் மீண்டும் உயிர் பெற்று அருகில் கிடைத்த கொம்பில் படர்ந்து தளிர் விட்டு பூத்தது. காற்று காலம் பேய் காற்று கொம்பு உலைந்தது, ஏன்? கொம்பு அல்ல இம்முறையும் அரச மர விழுது அது!!!   படம்: Baltimore Wall IX by
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தேர்வும், தோல்வியும்2020-03-11T18:18:05+01:00

காலம் என் வசம் ஆனால்!!

இதயம் பலவீனமானவர்கள் ..கர்ப்பிணி பெண்கள் இந்த பதிவினை படிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்! காலம் என் வசம் ஆனால்!! காலம் மட்டும் என் கைவசம் ஆனால் சற்றே பின்னோக்கி சென்று... காணி நிலத்தில், ஒரு மாட மாளிகை அமைத்து அதில் கூடவே பத்துப் பதினைந்து தென்னை மரம் நட்டு, அதனை பாரதிக்கு பரிசளிப்பேன் . பாரதியும், செல்லம்மாவும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதைக் கண்டு மகிழ்ந்திடுவேன். (பாரதியின் காணி நிலம்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

காலம் என் வசம் ஆனால்!!2020-03-05T15:33:05+01:00

பருவத்தே பயிர் செய்

காலையில் கணேஷ் பரபரப்பாக பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தான். 'அப்பா, இன்னிக்கு சாயந்தரம் ஆண்டுவிழா. நான் டான்ஸ் ஆடுறேன். நீ நிச்சயம் வரணும் ', என்றான். ஏழு வயது கணேஷின் கொஞ்சல் குரலில் அப்பா மயங்கி, 'நிச்சயம் வரேன் கண்ணே ', என்றார். போன முறை தான் போகாததை நினைவு கூர்ந்தார். டாட்டா சொல்லிவிட்டு அம்மாவுடன் பள்ளிக்கு ஸ்கூட்டியில் பறந்தான். அப்பா அலுவலகத்தில் தன்னை மறந்தார். மதிய நேரம் சாப்பிட்டதும் அலைபேசியை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

பருவத்தே பயிர் செய்2020-03-05T13:57:51+01:00

தமிழ்!!!

உயிர் என்னும் உயிர் எழுத்துக்கள் உடல் என்னும் மெய் எழுத்துக்களோடு சேர்ந்து உருவாகிய உயிர் இனமே! எம் இனத்தின் உயிரே !தமிழே ! உனக்கு வலிமை சேர்ப்பதாய் வல்லினங்கள், இனிமை தரும் இடையினங்கள், மென்மையைத் தரும் மெல்லினங்கள்! இவை கொண்டுள்ள ஓசை களுக்குத்தான் ஒப்புண் டோ இப்புவியில்!. உன் பெயருக்கு மூன்றெழுத்து! தொன்மை இளமை இனிமை என இயல்புகள் மூன்று! இயல், இசை, நாடகம் என வடிவங்கள் மூன்று மூவேந்தர்களால்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தமிழ்!!!2020-03-01T22:42:44+01:00

நட்பு

மனிதன் சமுதாயத்தோடு உறவாட முற்படும் பொழுது எடுக்கும் முயற்சியின் முதல் விளைவே நட்பு சாதி மத பேதம் மொழி, உருவம் என எதிலும் வேற்றுமை காணாத நட்பு ஒன்றாம் வகுப்பில் உருவாகினாலும் ஒய்வு பெற்றப் பின் தொடங்கினாலும் மனதோடு ஒன்றியேத்தான் இருக்கும் எந்நிலையிலும் எத்தருணத்திலும் நிகழக்கூடிய அற்புதமான நட்பிற்கு நம் பெருந்தகை தான் அதிகாரம் அமைக்காமல் விடுவாரா? இடுக்கண் களைவது, பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு என்று இன்றியமையாத நட்பிலக்கணங்களை இயம்புகின்றார்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நட்பு2020-03-05T15:28:10+01:00

அப்பா

நடை வண்டி பழகிய நாள் முதல் தடை தாண்ட கற்று கொடுத்து விரல் பிடித்து வீதி கடக்கையில் மடை திறந்த வெள்ளம் போல் விடை இல்லா வினாக்களை நான் கேட்க சிரிக்க சில பொய்களையும் சிந்திக்க பல மெய்களையும் கலந்து சமைத்து, சலிப்பின்றி கதைகள் சொன்ன நாட்கள் வேண்டும் ஜன்னல் வழி மின்னல் கண்டு அச்சத்தோடு அழுத பொழுது “அருகில் நானிருக்க அழுகையேன்” என்றணைத்து ஆறுதலாய் பெருகி வழிந்த விழி
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

அப்பா2020-03-01T22:38:03+01:00

அப்பாவின் மிதிவண்டி

விடியும் முன் எப்பொழுதும் எழும் தாய் அன்றும் எழுந்து அன்றைய தினத்திற்க்கான தனது வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள். சற்று நேரம் கழித்து பிள்ளைகளையும் கணவரையும் எழுப்பினாள். குழந்தைகளின் காதில் வானொலி ஒலித்தது. “இன்று ஒரு தகவல்” சொல்லிக்கொண்டிருந்தார் தென்கச்சி கோ. ஸ்வாமிநாதன். கேட்டும் கேட்காமலும் அரை தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தனர் பிள்ளைகள் இருவரும். அப்பாவும் அம்மாவும் எதை பற்றியோ  மிகவும் மும்முரமாக பேசி கொண்டு இருந்தது அரைகுறையாக காதில்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

அப்பாவின் மிதிவண்டி2020-03-02T12:53:26+01:00

சிற்பி

தன் உதிரத்தால் உயிர் கொடுத்து வியர்வையால் என் உடல் வளர்த்து என் பலவீனங்களை தாங்கும் வேலியாய் அறிவை அயராது வளர்க்கும் ஆசானாய் மறைவில் சுற்றத்திடம் எனை புகழ்ந்து நேரில் இன்னும் உயரம் என பணித்து அறமும் அன்பும் என் ஆழத்தில் பதித்து தான் எதிர்பாரா உயரம் நான் பறக்க பெருமிதமும் கண்ணீருமாய் கடவுளை வணங்க வேலை முடித்த திருப்தியில் கண்ணுறங்க எனை செதுக்கிய என் தேவனின் சாம்பலை கடலில் கரைத்து
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

சிற்பி2020-02-25T13:39:47+01:00

தாயின் தாய்மை!

அஞ்சு பிஞ்சு விரல்கள் வருட ஆருயிருடன் மறுபிறவி எடுத்ததை உணர்ந்தவளாய் இரு கண்களால் மணவாளனை(கணவன்) துளாவ ஈன்றவன்  ஈருயிர்களையும் இமைபிறழாமல் வெம்பி இரசித்து உவகை மிகுந்து கட்டி அணைத்து பொங்கிய கண்ணீர் ஊற்றில் குடும்பபமே  ஆனந்த குளியலிட எவ்வித உணர்வும் இல்லாதவனாய் சிசுவை கையால் ஏந்தி விடுவிடுத்து தன்னை சுமந்து தாய்மையடைந்தவளிடம்  கொடுத்த                         
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தாயின் தாய்மை!2020-02-14T16:14:10+01:00
Go to Top