window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

தமிழ்

Home>Posts>தமிழ்

சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை

ஒரு 'இளங்'கோவால் இயற்றப் பெற்ற 'முது'பெரும் காப்பியம் 'காற்'சிலம்பை மையப்படுத்தி காதைகள் சொல்லும் 'தலை'ச் சிறந்த காவியம் ஒரு சாமானிய வாழ்க்கையை அகம் புறமாக விவரித்து சாகாவரம் பெற்ற இலக்கியம் இயல் இசை நாடகம் என முத்தமிழில் முலாம் பூசி சேர சோழ பாண்டிய நாடு என முக்களங்களையும் காண்டங்களாக கொண்டு உரைசாற் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை2020-05-25T16:55:29+02:00

தந்தையின் பிரிவு

அசையாமல் வெகுநேரம் அமைதியாய் இருப்பதும் ஏன் ஆசைகள் எனக்கும் உண்டு உன்னருகில் வாழ்ந்திடவே இப் பொழுது நீ எழுந்தால் உரைந்திடுமே என் கண்ணீர் ஈடில்லா ஆனந்தத்தில் இதயமும் புன்னகைக்கும் உவகை தனை எனக்களிக்க உயிருடன் நீ வாராய் ஊற்றாக என் மீது உன் அன்பை பொழிந்திடுவாய் எனக்காக நீ பட்ட அரும்பாடு நான் அறிவேன் ஏக்கங்கள் அதை தீர்க்க எழுந்து நீ வரவேண்டும் ஐமிச்சம் என்னுள்ளே அதை நீக்க கண்விழிப்பாய்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தந்தையின் பிரிவு2020-05-07T11:36:10+02:00

மனிதத்தையன்று

பாத சுவடுகள் இல்லையென அலைகள் ஓயவில்லை மனித அரவம் இல்லையென மலைகள் சரிய இல்லை மாசும் தூசும் இல்லையென மரங்கள் மடியவில்லை இரைச்சல் இல்லையென பறவைகள் பதுங்க இல்லை விமானங்கள் இல்லையென விண்மீன்கள் விம்மவில்லை பயணங்கள் இல்லையென பாதைகள் முடியவில்லை பக்தர்கள் இல்லையென படைத்தவன் உறங்க வில்லை பூஜைகள் இல்லையென பண்டிகைகள் கலங்கவும் இல்லை கல்லறைகள் நிரம்பி வழிந்தாலும் மலர்கள் மலர தான் செய்கின்றன மனித மனமது இருண்டாலும் காலை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

மனிதத்தையன்று2020-05-06T16:13:49+02:00

நட்பு

மனிதன் சமுதாயத்தோடு உறவாட முற்படும் பொழுது எடுக்கும் முயற்சியின் முதல் விளைவே நட்பு சாதி மத பேதம் மொழி, உருவம் என எதிலும் வேற்றுமை காணாத நட்பு ஒன்றாம் வகுப்பில் உருவாகினாலும் ஒய்வு பெற்றப் பின் தொடங்கினாலும் மனதோடு ஒன்றியேத்தான் இருக்கும் எந்நிலையிலும் எத்தருணத்திலும் நிகழக்கூடிய அற்புதமான நட்பிற்கு நம் பெருந்தகை தான் அதிகாரம் அமைக்காமல் விடுவாரா? இடுக்கண் களைவது, பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு என்று இன்றியமையாத நட்பிலக்கணங்களை இயம்புகின்றார்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நட்பு2020-03-05T15:28:10+01:00

அப்பா

நடை வண்டி பழகிய நாள் முதல் தடை தாண்ட கற்று கொடுத்து விரல் பிடித்து வீதி கடக்கையில் மடை திறந்த வெள்ளம் போல் விடை இல்லா வினாக்களை நான் கேட்க சிரிக்க சில பொய்களையும் சிந்திக்க பல மெய்களையும் கலந்து சமைத்து, சலிப்பின்றி கதைகள் சொன்ன நாட்கள் வேண்டும் ஜன்னல் வழி மின்னல் கண்டு அச்சத்தோடு அழுத பொழுது “அருகில் நானிருக்க அழுகையேன்” என்றணைத்து ஆறுதலாய் பெருகி வழிந்த விழி
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

அப்பா2020-03-01T22:38:03+01:00

தமிழும் அறிவும்!

தமிழ் அழகான மொழி என்பார்கள்,அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால்  தமிழ் என்றவுடன் என் நினைவில் வருவது அறிவு . தமிழுடன் அறிவு ஒருசேர கலந்து உள்ளது. ஜாதி ,மதம்,  மொழி என்று எந்த ஒரு கட்டுக்குள் அடங்காத உலகப் பொது மறையாம்  திருக்குறளை தமிழ்  வழங்கியுள்ளது. மொழி என்ற கட்டுக்குள் கூடவா வரவில்லை என்ற கேள்வி எழும். திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையை நாம் எங்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தமிழும் அறிவும்!2020-02-24T21:35:47+01:00

நட்பு ஓர் உணர்வு

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.”   என்னும் குறளை மனதிற்குள் கூறு போட்டுகொண்டிருந்தாள் அவள். இன்னும் அரைமணிநேரத்தில் விமானம்தரையிறங்கிவிடும். அதற்குபிறகு குறைந்தது இரண்டு மணிநேரமாவது காத்திருக்க வேண்டும் என்று மனதில்பெருமூச்சு விட்டாள். “என்னங்க “என்று தோளில் சாய்ந்தாள். “ம்“ என்று காதில் இருந்த ஹெட்போனை கழட்டினான். “நீங்க பிளைட் நிறுத்தினதும் மட மடன்னு மொத ஆளா போய் பாஸ்போர்ட் செக்அப் ல நின்னுகோங்க. நான் பையனையும் பெட்டியையும் எடுத்துக்கிட்டு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நட்பு ஓர் உணர்வு2020-02-25T23:39:02+01:00

தில்லானா தில்லானா

அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும், குளிச்சிட்டு சுத்தமா அந்த புதுசா வாங்குன ஜிப்பாவ போட்டுக்கிட்டு சாமி கும்பிட்டு சாகசம் பண்ண அரம்பிச்சேன். அது சாதகம் பா. Ok சாதகம் ஆரம்பிச்சேன். வழக்கம் போல எல்லோரும் வந்தாங்க, கச்சேரி சூப்பரா இருந்துச்சு. என்ன சாதகம், கச்சேரியா? கொஞ்ச நாள் முன்னாடி போலாம். நாங்க எல்லாரும் எங்க ஊர்ல இருந்து பெங்களூர்ல வேலை பாத்துகிட்டு இருந்தோம். நல்லா போய்கிட்டு இருந்த வாழ்க்கைல ஒருநாள் ஒரு முடிவு பண்ணினோம். என்ன பண்ணினோம்? அது வேற டிசம்பர் சீசனா,பெங்களூர் குளிருக்கு... ஏதாவது புதுசா செய்யணும்னு முடிவு பண்ணினோம். என்னதான்யா முடிவு பண்ணீங்க? அதுக்காகத்தான் எங்க gang எல்லோரும்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தில்லானா தில்லானா2020-02-17T09:52:01+01:00

ஒரு கோடை விடுமுறையில் …….

படிச்சு படிச்சு சலிச்சு போச்சு கண்ணு ரெண்டும் வலிச்சு போச்சு முழு ஆண்டு பரீட்சை முடிச்ச முத நாலு விடிய எந்திரிச்சு பேருக்கு பல்லு வெளக்கி விடிய விடிய கண்ட கனா கண்ணுல நிக்க அழுக்கான மூஞ்சிய அழுத்தி மட்டும் தொடச்சிக்கிட்டு ஊற வெச்ச பழைய சோறு புளிச்சு போன நீர் மோரு ஊறுகாயின் சாறோட ஒன்னா ஊத்தி ஒழுக ஒழுக கரைச்சு குடிச்சு செருப்ப மறந்து ஓட்டம் எடுக்க
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ஒரு கோடை விடுமுறையில் …….2020-02-14T21:40:13+01:00

நல் வாழ்வு நல்கும் நம் கிராமங்கள்: ஒரு பயணம்

இந்தியாவின் பல நகரங்கள் அதி வேக நாகரீக வளர்ச்சியினாலும் மேற்கத்திய பழக்க வழக்கங்களினாலும் அசுர வேகத்தில் முன்னேறி வந்தாலும், அதன் உயிர் நாடி பசுமையும் , பாசமும், அழகும் , ஆழமும் உள்ள  அதன் கிராமங்களிலேயே  உள்ளது. கிராம வாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் தான். பெரு நிறுவன வருகையினாலும், பன்னாட்டு நிறுவங்களின் வளர்ச்சியினாலும் சிறு முதல் பெரு விவசாயிகளின் வியாபார முறைக்கான நியதிகள்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

நல் வாழ்வு நல்கும் நம் கிராமங்கள்: ஒரு பயணம்2020-02-13T14:34:13+01:00
Go to Top