window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'UA-139366637-1');

கவிதை

Home>Posts>கவிதை

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்

வான் நிலவே வளர் பிறையே புல் வெளியே வெண் பனி மழையே இயங்கிய காலம் உறங்கி கிடந்து மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து இருக்கும் போது மறந்த உண்மை இறக்கும் போது உணர பெற்ற கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா கருப்பை விடுத்த நொடி முதல் இருப்பை தேடி திரியும் உலகில் தவழ்ந்து துவண்டு எழுந்திட
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

குரல்வளை உடைந்த குயிலொன்றின் கூக்குரல்2021-01-24T20:09:24+01:00

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்

வருது வருது தமிழ் தையது வருது கிழிஞ்சு போன மனுச மனச தச்சு சேக்க தய்யி வருது நஞ்சு போன பொழப்பயெல்லாம் நிமித்தி வெக்க தய்யி வருது மனுச ஜாதி வெதைச்சு வெச்ச வம்பெல்லாம் வெனையாக வெதையெல்லாம் பயிராச்சு வைரஸா உயிராச்சு உசுரான நாள் மொதலா உசுரெடுக்க ஆர்மபிக்க ஊரெல்லாம் முடங்கி போச்சு துக்கத்துல தூக்கம் போச்சு கம்மா நெறஞ்சு காடு வெளைஞ்சு மண்ணுல போட்டதெல்லாம் மச மசன்னு வளந்து
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

வரம்மொன்னு குடுக்க தையது பொறக்கும்2021-01-24T18:24:28+01:00

தண்ணி தேடும் தரிசு நெலம்

முக்கடலின் சந்திப்புல முத்தா ஒரு ஊரு முன்னோரின் கலைய சொத்தா பாக்குற ஊரு வீரமும் தீரமும் மண்ணோடு உறைஞ்ச ஊரு ஆட்டமும் பாட்டமும் பண்பாட்டுல கலந்த ஊரு. தித்திக்கும் தமிழ் பேசுற தென்னாடு ; நாட்டுப்புற கலையில தல சிறந்த எங்க தமிழ்நாடு காதல கதையா, களவிய கவிதையா வீரத்த நாடகமா, வெற்றிய ஆட்டமா நாகரீகத்த நயமா நாலு பேருக்கு சொன்ன கூட்டம். சந்தோஷத்துக்கு பாட்டு, சங்கடத்துக்கும் பாட்டு உழவுக்கு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தண்ணி தேடும் தரிசு நெலம்2020-12-14T20:29:37+01:00

போதியின் கீழ் பேதையவள்…

எழும் அலை எல்லாம் கரை காண்பதில்லை கரை காணும் அலையாவும் கதை கேட்பதில்லை விழும் மழை எல்லாம் நிலம் சேர்வதில்லை நிலம் சேரும் நீரெல்லாம் வேர் நனைப்பதில்லை துளிர்க்கும் மொட்டெல்லாம் மலர்ந்து மகிழ்வதில்லை மலரும் மலரெல்லாம் மகரந்தம் தருவதில்லை சிந்தும் கண்ணீர் எல்லாம் சோகம் கரைப்பதில்லை கரைந்த சோகம் எல்லாம் மறைந்து போவது இல்லை கற்பனைக்கெட்டியது எல்லாம் கலையாவதில்லை கலையானவை எல்லாம் நிலை கொள்வதில்லை உதிர்ந்த உதிரம் எல்லாம் உயிராய்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

போதியின் கீழ் பேதையவள்…2020-12-14T20:14:33+01:00

பேராற்றல்

ஐந்தாவது பாட ஏடு என் கையில் முதல் பக்கம் நம் தேச தந்தை அறியாமை பாவம் என்றார். நிறைய பிழைகள் செய்தேன் அறியா வயது என்றாள் அன்னை. அகவை நாற்பதை கடந்தேன் என் மகன் பிழைகள் புரிய என் மனைவி அறியா வயது என்றாள். பேராசிரியர் என கல்லூரி அழைத்தது என்னை கெட்டிக்காரன் என பெருமிதம் கொண்டாள்  அன்னை. கணவன் அறிவாளி என கர்வம் கொண்டாள் மனைவி. பிணி மூப்பு
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

பேராற்றல்2020-06-23T14:38:28+02:00

ஞானாம்பிகை

அம்பிகையின் சன்னிதி இருபது வயது எனக்கு கனவு நிறைந்த கண்கள் மனம் விரும்பும் மணாளன் வேண்டினேன். பத்து வசந்தங்களுக்கு பின் அவள் முன் மீண்டும் நான் உணர்ச்சி பெருக்கில் கன்னங்களில் கண்ணீர் வழிய குழந்தை செல்வம் வேண்டினேன். அரை சதம் அகவை அடைந்தேன் ஆரோக்கியம் வேண்டினேன். பத்து வசந்தங்களுக்கு பின் மீண்டும் அவள் சன்னிதியில் நான் வேண்ட கரங்கள் நீளவில்லை. அம்பிகை கொடுக்க மறுத்தாளா ? இல்லை பெற்று சலித்தேனா
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

ஞானாம்பிகை2020-06-23T14:38:34+02:00

நட்பு…

உன்னதமான நட்புக்கு ஓரிரு உதாரணங்கள் ....முகக்கண்ணாடியாய் இருக்கும் நட்பு,பொய் அகற்றி, உண்மையை மட்டும் உணர்த்தும்... நிழலாய் நிற்கும்நட்பு,நம்மை விட்டு அகலாமல் தொடரும்...சொந்தமின்றி வாழும் உறவுண்டு,நட்பின்றி வாழும் உயிரேது?கதவை திறந்தால்காற்று வரும்..மனதை திறந்தால் நட்பு மலரும்...உன்னத நட்பை கண்ணாடியாய் பிரதிபலித்து,நிழலாய் தொடர்வோம்....

நட்பு…2020-06-23T14:38:55+02:00

சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை

ஒரு 'இளங்'கோவால் இயற்றப் பெற்ற 'முது'பெரும் காப்பியம் 'காற்'சிலம்பை மையப்படுத்தி காதைகள் சொல்லும் 'தலை'ச் சிறந்த காவியம் ஒரு சாமானிய வாழ்க்கையை அகம் புறமாக விவரித்து சாகாவரம் பெற்ற இலக்கியம் இயல் இசை நாடகம் என முத்தமிழில் முலாம் பூசி சேர சோழ பாண்டிய நாடு என முக்களங்களையும் காண்டங்களாக கொண்டு உரைசாற் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

சிலப்பதிகாரத்தைப் பற்றி நான் எழுதிய கவிதை2020-05-25T16:55:29+02:00

தந்தையின் பிரிவு

அசையாமல் வெகுநேரம் அமைதியாய் இருப்பதும் ஏன் ஆசைகள் எனக்கும் உண்டு உன்னருகில் வாழ்ந்திடவே இப் பொழுது நீ எழுந்தால் உரைந்திடுமே என் கண்ணீர் ஈடில்லா ஆனந்தத்தில் இதயமும் புன்னகைக்கும் உவகை தனை எனக்களிக்க உயிருடன் நீ வாராய் ஊற்றாக என் மீது உன் அன்பை பொழிந்திடுவாய் எனக்காக நீ பட்ட அரும்பாடு நான் அறிவேன் ஏக்கங்கள் அதை தீர்க்க எழுந்து நீ வரவேண்டும் ஐமிச்சம் என்னுள்ளே அதை நீக்க கண்விழிப்பாய்
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

தந்தையின் பிரிவு2020-05-07T11:36:10+02:00

மனிதத்தையன்று

பாத சுவடுகள் இல்லையென அலைகள் ஓயவில்லை மனித அரவம் இல்லையென மலைகள் சரிய இல்லை மாசும் தூசும் இல்லையென மரங்கள் மடியவில்லை இரைச்சல் இல்லையென பறவைகள் பதுங்க இல்லை விமானங்கள் இல்லையென விண்மீன்கள் விம்மவில்லை பயணங்கள் இல்லையென பாதைகள் முடியவில்லை பக்தர்கள் இல்லையென படைத்தவன் உறங்க வில்லை பூஜைகள் இல்லையென பண்டிகைகள் கலங்கவும் இல்லை கல்லறைகள் நிரம்பி வழிந்தாலும் மலர்கள் மலர தான் செய்கின்றன மனித மனமது இருண்டாலும் காலை
[வாசிப்பை தொடருங்கள்/Continue reading...]

மனிதத்தையன்று2020-05-06T16:13:49+02:00
Go to Top