முன்சென் தமிழ் சங்க வலைப்பதிவில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா! இதோ உங்களுக்கான தகவல்!
சமீபத்தில் பலர் நமது தமிழ் சங்கத்தை தொடர்பு கொண்டு தங்களது படைப்பாற்றல் மற்றும் எழுத்து திறனை வெளிப்படுத்த நமது தமிழ் சங்க வலைப்பதிவில் ஓர் இடம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்கள்.
இதற்கு மறுபுறம் வெளிநாட்டு வாழ்க்கையை குறித்த கேள்விகளையும் குறிப்பாக ஜெர்மனியில் வேலை தேடும் விவரங்கள், வாடகைக்கு அல்லது சொந்தமாக வீடு வாங்கும் வழிகள் விவரங்கள் மேலும் சிறப்பாக கர்ப்ப காலம் மற்றும் உடல் நலக்குறைவு நேரங்களில் தேவைப்படும் மருத்துவ விவரங்கள், மருத்துவ காப்பீடு குறித்த தகவல்கள் மற்றும் இதர பயனுள்ள விவரங்களையும் கேட்டு இருந்தார்கள்.
இது போன்ற விவரங்களை அறிந்த நமது தமிழ் மக்கள் இதை அறிந்திராத மற்ற தமிழ் சொந்தங்களுக்கு இத்தகவல்களை கொண்டு சொல்ல இவர்களுக்கான ஒரு தொடர்பை ஏற்படுத்த விரும்பினோம்.
நமது வள்ளுவனின்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது
என்ற குறளுக்கு இணங்க பலரும் பயன்பெறும் நோக்கில் இந்த வலைப்பதிவானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பதிவில் தாங்கள் பகிர இருக்கும் கருத்துக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் இருந்தோ அல்லது நீங்கள் கேட்டு அறிந்த செய்திகளாகவோ இருக்கலாம். தங்களது கட்டுரைகள் மற்றும் செய்திகளை தமிழ் அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பலாம். இறுதியாக தங்களது படைப்பு முன்சென் தமிழ் சங்க இணையதளத்தில் வெளியிடப்படும்.
எந்த வகையான தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ?
முன்சென் தமிழ் சங்கம் இரண்டு வகையான தகவல்களை ஏற்றுக்கொள்கிறது . அதன் விவரம்
- முன்சென்/ ஜெர்மனி வாழ்க்கையின் சவால்கள் மற்றும் வழிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் பயனுள்ள பதிவுகள் மற்றும் கட்டுரைகளை அனுப்பலாம். இந்த கட்டுரையின் உள்ளடக்கங்கள் மளிகை பொருள் வாங்கவதில் இருந்து மருத்துவமனை காப்பீடு வரை அனைத்தையும் உள்ளடக்கியது.
- தங்களது படைப்பாற்றல், எழுத்து திறனை வெளிப்படுத்தும் வகையில் தங்களது படைப்புக்கள் அல்லது கட்டுரைகள், கவிதைகள் இருக்கலாம்.
தமிழ் சங்கம் என்பதினால் தமிழ் மொழி கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியில் வரும் கட்டுரைகளையும் ஏற்று கொள்ளப்படும்.
கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற விவரங்கள்
- உங்களது படைப்பு மற்றும் கட்டுரைகளுக்கு குறைந்தபட்ச வார்த்தை அல்லது வாக்கிய கணக்குகள் ஏதும் இல்லை. பொதுவாக விருந்தினர் பதிவுகள் குறைந்தபட்சம் 400 வார்த்தைகளை கொண்டிருந்தால் சிறப்பு . மற்ற மாதத்திற்கு 2-4 கட்டுரைகள் வெளியிடும் பட்சத்தில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.
- உங்கள் படைப்புகள் உங்களது சொந்த பதிவுகளாக இருத்தல் வேண்டும். அப்பதிவுகள் வேறு எங்கும் வெளியிட்டதாகவோ அல்லது அங்கிருந்து எடுத்ததாகவோ இருக்கக்கூடாது.
- முன்சென் தமிழ் சங்க இணையதளத்தில் தங்களுக்கென்று தனி பக்கத்தோற்றம் ஏற்படுத்தி தரப்படும் அதோடு தங்களது சமூக தளங்களை அத்தோடு இணைத்து கொள்ளலாம் .
- உங்கள் கட்டுரையில் பொதுவாக இணைப்புகள் இருக்கலாம். ஆனால், விளம்பரங்கள் (advertisement) அல்லது தனி நபருக்கு ஆதாயம் தரும் இணைப்புகளை (referal links) போன்றவற்றை முன்சென் தமிழ் சங்க இணையதளத்தில் ஏற்றுகொல்வது இல்லை , இருப்பினும் பயனுள்ள இணைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- தங்களது இறுதி கட்டுரை எந்த ஒரு காப்புரிமையும் மற்றும் பதிப்புரிமை மீறல்கள் செய்யவில்லை என்று உறுதிப்படுத்திய பின் முன்சென் தமிழ் சங்க இணையதளத்தில் வெளியிடப்படும்.
- வலைப்பதிவாளர்கள் பங்களிப்பாளர்களாக (“Contributors”) தொடங்கி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்டுரைகளை பதிவிட்ட பின் எழுத்தாளர் (“Author”) ஆக உயர்த்த படுவர்.
- தங்களது படைப்புகளுக்கு குறிப்பிட்ட வரையிலான வடிவ மாற்றங்கள் ,இலக்கணப்பிழைகள் , நிறுத்தற்குறிகள் எங்களால் செய்து தரப்படும். எனினும், உங்கள் கட்டுரைகளுக்கு கணிசமான மாற்றங்களை செய்ய நாங்கள் விரும்பவில்லை.
பொறுப்பு மறுப்பு:
வலைபதிவில் பதிவிட படைப்புகள் இயற்றுவது எளிதான காரியம் அல்ல என்பதை நாங்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறோம். ஆதலால், முன்சென் தமிழ் சங்க வலைப்பதிவில் உங்களது பதிவுகளை பகிர பெரிதும் விரும்புகிறோம். மேலும் தாங்கள் எழுதிய படைப்புகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிட முடியும் என்பதை உறுதியளிக்க முடியாது. இது பதிப்பாசிரியர் முடிவு மற்றும் பல்வேறு உரிமைத்துறப்புகளையும் (copyright, privacy issues) கருத்தில் கொன்டே வெளியிடப்படும். உங்கள் பதிவு வெளியிடப்படும் என்ற சந்தேகம் வரின் படைப்பின் உட்கருத்தை முன்னதாகவே பதிப்பாசிரியருக்கு அனுப்பி விவரம் அறியலாம். மேலும் தகவல் அறிய விரும்புவர்கள் எங்களை மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம்.
பதிவு சமர்ப்பிப்புகள்:
இதன் தொடர்ச்சியாக உங்கள் கட்டுரைகளை முன்சென் தமிழ் சங்க வலைப்பதிவுக்கு சமர்ப்பிக்க நீங்கள் முடிவு செய்தால், உங்கள் கட்டுரையை எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். வழக்கமாக ஒரு வாரத்திற்குள் நாங்கள் பதிலளிக்க முயற்சிக்கிறோம். உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் அனுப்பும் பொது அத்தோடு தங்களை பற்றி ஒரு பத்தி அறிமுகம் எழுதி அனுப்புங்கள். அதோடு உங்கள் சமூக வலைதளங்களை இணைக்க விரும்பினால் அதனையும் தெரியப்படுத்தவும் . தங்களது படைப்புகளுக்கு வாசகர்களுடனான கருத்துக்களை அறிய விரும்புகிறீர்களா இல்லையா என்பதை தெரியப்படுத்தவும். தயவுசெய்து மின்னஞ்சலின் உள்ளடக்கத்தில் உங்களது கட்டுரையையும் இணைப்பில் படங்களையும் அனுப்பவும் . நீங்கள் கட்டுரைக்கு இணைக்க விரும்பும் அனைத்து படங்களும் பதிப்புரிமை அல்லது சரியான பதிப்புடையதாக இருக்க வேண்டும்.
வலைப்பதிவு கட்டுரைகளுக்கான சில குறிப்புகள்:
- வனத்தைக் கவரக்கூடியதான தலைப்பு
பொதுவாக வாசகர்கள் தலைப்பை பொறுத்தே கட்டுரையை முடிவு செய்வார்கள். அதனால் தலைப்பு அவர்களை ஈர்க்க கூடியதாக இருந்தால் கூடுதல் பலம். - அறிமுக பத்தி
உங்களது கட்டுரையின் நோக்கத்தை அறிமுக பத்தியில் தெரியப்படுத்துவதன் மூலம் அது வாசகர்களை தொடர்ந்து வாசிக்க ஊக்கப்படுத்தும்
- சிறப்பு படம்
ஒரு சிறப்பு படம் தலைப்பு போலவே முக்கியமனா ஒன்றாகும் . இந்த பார்வை மனதில் கட்டுரையின் நோக்கத்தை தெளிவுபடுத்திக்கிறது . எனவே, உங்கள் படத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும். உங்கள் மொபைல் ஃபோன் கேமராவை வெளியே எடுத்து, ஒரு படத்தை கிளிக் செய்து அதன் அடிப்படையில் ஒரு நல்ல கட்டுரையை உருவாக்கலாம். - வரி படம்
ஒரு கட்டுரையில் மேலும் வாசிக்கும்போது, உரைகளுடன் தொடர்புடைய படங்களுடன் இணைக்கலாம், மேலும் அவை உங்கள் படைப்பிற்கு மதிப்பை சேர்க்கும் - உங்கள் அனுபவம்
உங்கள் கட்டுரை உங்களது அனுபவத்துடன் இணைந்து அமைந்தால் சிறப்பு - பல்வகை வாக்கியங்களில் எழுதுதல்
உங்களது கட்டுரைகளுக்கு சரியான பத்தி அமைத்து , மேற்கோள்கள், பழமொழிகள் திரட்டி, நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும். - நடை அழகு
கட்டுரையை நடை அழகுடன் எழுதுவது சிறப்பு - சுருக்கமானதாகவும் தெளிவாகவும் கட்டுரை இருக்க வேண்டும்
இவற்றின் அடிப்படையில் தாங்கள் எழுத விரும்பினால் muenchentamilsangam@gmail.com எனும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான வலைப்பதிவு கணக்கு ஏற்படுத்தி தரப்படும். நன்றி!
An invitation to write in MTS blog space
Recently several members of München Tamil Sangam e.V. asked if there is a platform to express their creative writing skills or share useful information and tips. On the other hand, we are also frequently asked many questions about life in Munich (Germany) such as where to find rental listings, job search, pregnancy related info, insurances in Germany, buying a flat/house etc. Then, sparked an idea, why not connect these two kinds of people. This could be from your own experience or from what you hear, these things definitely help another individual somewhere someday. Yes, we now invite active bloggers who can write articles in Tamil/ English about life in Germany. Your articles will be posted in the official website of München Tamil Sangam.
What kind of content do you accept?
We accept two kinds of articles.
- Articles under the broad title of “Life in Munich/Germany”. Anything that your blogger head thinks could be useful to people who live/visit Munich/Germany. These articles can be based on your experience or research, can range from buying groceries to house, insurances to hospitals.
- Articles that tickle your creativity. As we are a Tamil Sangam, we would prioritise articles written in Tamil, however we do not want to limit this only to Tamil. English and German are welcome as well. Poem, Essays, short-stories, weekly stories, your call.
As we are also learning things by doing, we will add more details in future.
What else to consider?
- There is no minimum length for your post, but usually the guest posts have over 400 words. 2 -4 articles per month would be a good start, but that is not a number set on stone.
- Your posts must be original and should not have been published elsewhere. You can have your own profile on the website of München Tamil Sangam and also links to your website/social networking sites. We do not entertain links with adverts or referral gains, however links to useful resources shall be accepted. It is always a good idea to run your final article through a plagiarism checker to make sure neither you nor MTS is troubled later for copyright violations.
- Bloggers will begin as “contributors” and eventually be promoted to “authors” once a certain number of articles are posted in the blog.
- A site-wide editorial process will decide on the publication decisions of the articles.
- Formatting decisions (i.e., cosmetic decisions) of the site will be based on the general layout of the blog. Certain levels of customisations within the possibilities of technical stretch are possible.
- Copyedit for grammar, punctuation, spellings etc shall be done. However, we do not intend to make substantial changes to your articles.
Disclaimer
We understand that writing a post is an effort. However, the fact that you wrote an article and submitted to München Tamil Sangam blog does not guarantee the publication of the post. It is the sole decision of the editors. When in doubt, you may always discuss beforehand with the editors by writing an email with a short description. You will definitely hear from us.
Submissions
If you further decide to submit your articles to MTS Blog, please email us your article for consideration. We will try to respond within a week usually. If you would be submitting your very first article, kindly send us a short biography (in less than 80 words), and if you wish your links to your social networking sites. Also indicate, if you are willing to engage in comments with the readers of the post. If you do not wish to engage we will turn off the comment option. Kindly include the post in the body of the email and not as an attachment. Attachments are usually reserved for images. All images you would like to attach to the article must be copyright free or appropriately copyrighted.
Some tips for blog articles
- An appealing title. People often decide whether to click a link or not based on what the title reads. Your title must attract the readers to check what is it all about.
- Introductory Paragraph. The idea of your article must be presented here, this is the second step to making your reader read the full article and even engage with you and other readers.
- Featured Image. A featured image is equally as important as the title. This visually presents the concept and appeals to the mind. Therefore, choose your image wisely. You may even design your own illustration with many online tools out there. Get your mobile phone camera out and click a picture and tell your own story in a way that no one else could.
- In-line image. As we read further into an article, relevant images can be added in-line with the text and they add a certain value to your narration.
- Your experience. Doesn’t matter what your article is about, a story line is what you should aspire for in your article.
- Visual Aids. Use side headings, bullets, lists etc wherever possible and make the content scannable for the eye.
- Dialogue. If possible engage with the reader, pose a question wherever appropriate. Make them relate to your article. A good article can even inspire your readers to write as well.
- KISS. Keep it short and simple. I leave it at that.So if you would like to contribute to this space as a blogger, please contact muenchentamilsangam@gmail.com. An account will be created for you.