தமிழ் மன்றம்

கடல் கடந்து வாழும் முன்சென் தமிழ்ச் சமூகம் தமிழ் பழக அதில் சிறக்க முன்சென் தமிழ் சங்கத்தால் தொடங்கப்பட்டதே தமிழ் மன்றம். இம்மன்றம் 2020 உழவர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்தில் இந்திய தூதுரக பொது செயலர் மேதகு திரு. மோஹித் யாதவ் அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது.

நோக்கம்

தமிழ் ஆர்வலர்களின் திறமையை வெளிப்படுத்வும், மொழி வளத்தை பெருக்குவதும் இம்மன்றத்தின் நோக்கம்.

செயல்பாடுகள்

  1. புத்தக மன்றம்

  • உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
  • உறுப்பினர்கள் இந்த புத்தகங்களை படித்த பின்னர் அந்த புத்தகங்களை பற்றி உரையாற்றுவர்.
  • பிற மொழி புத்தகங்களைப் பற்றி விவாதிப்பதை நாங்கள் தவிர்க்கிறோம். இருப்பினும், அத்தகைய விதிவிலக்கான கோரிக்கை எழுந்தால், 2 தமிழ் அல்லாத புத்தகங்களுக்கு இடையில் குறைந்தது 5 தமிழ் புத்தகங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

  1. பேச்சாளர்கள் மன்றம்

  • உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகள் பரிந்துரைக்கப் பட்டால் ஜனநாயக முறைப்படி வாக்கு எடுத்து தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்
  • உறுப்பினர்கள் இந்த தலைப்புகளில் தங்கள் படைப்புகளை உருவாக்கலாம். இந்த படைப்புகள் தமிழில் இருக்க வேண்டும். இவை கட்டுரை, கதை, சிறுகதை, கவிதை, என எந்த வடிவிலும் இருக்கலாம்.

  1. வாரம் ஒரு தலைப்பு

  • ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைப்பு வழங்கப்படும். வார இறுதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் ஒரு கட்டுரை, கதை, சிறுகதை, கவிதை, என எந்த வடிவிலும் தங்களது படைப்புகளை இயற்றி வாட்ஸ்அப் குழு அல்லது வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் மற்ற உறுப்பினர்கள் தங்க கருத்துக்கள் பாராட்டுகள் உங்களுக்கு வழங்க வாய்ப்பு ஏற்படும். இந்த செயல்பாட்டின் கீழ் வரும் தலைப்புகள் சிலர நமது தமிழ் மன்ற வலைப்பதிவில் உறுப்பினர்கள் பதிவிடுகின்றனர். தலைப்புகள் மற்றும் பதிவுகள்.

  1. வலைப்பதிவு

  • தனது படைப்புகளை வலைப்பதிவுகளாய் நமது இணையதளத்தில் பதிவேற்றலாம். வலைப்பதிவு இட விரும்புவோர் தங்களது முதல் படைப்புடன் எங்களை அணுகலாம்.

தமிழ் மன்ற சந்திப்பு

ஆரம்ப கட்டத்தில் மாதம் ஒரு முறை உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெறும். இந்த சந்திப்பில் மேல் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் விவாதிக்கப்படும்.

  • கூட்டத்தை பொறுப்பேற்று நடத்தும் உறுப்பினர் நிகழ்ச்சி நிரலை வழங்குவார்.
  • கூட்டத்தில் பேச விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தையும் பேசவிரும்பும் உரையின் விவரத்தையும் முன்னரே தெரிவிக்கவேண்டும்.
  • ஒரு கூட்டத்தின் போது பேச்சாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உரையின் நேரம் தீர்மானிக்கப்படும். அதிகமான பேச்சாளர்கள் இருந்து, நேரம் போதவில்லை எனில், அடுத்த கூட்டத்திற்கு அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் உரையை முடித்து மற்ற உறுப்பினர்களின் படைப்புகளுக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • ஒவ்வொரு உறுப்பினரும் சுற்று முறைப்படி கூட்டத்திற்கு பொறுப்பேற்று கூட்டத்தை நடத்துவார். அவர் நிகழ்ச்சி நிரல் பேச்சாளர்களுக்கான நேரம் பேச்சாளர் வரிசை படுத்துதல் போன்ற கூட்டத்தின் நடவடிக்கைகளை பொறுப்பேற்று நடத்துவார். அனுபவம் வாய்ந்த உறுப்பினர் ஒருவர் அவருக்கு உதவலாம்.
  • ஒரு புதிய உறுப்பினர் கூட்டத்திற்கு பொறுப்பேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 2 கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்க வேண்டும்.
  • பொதுவாக சொந்த படைப்புகளை அரங்கேற்ற முன்னுரிமை தரப்படும்.

தமிழ் மன்றம் மற்றும் அதன் செயல்பாடுகளில் சேர, ஆர்வம் உள்ளவர்கள் muenchentamilsangam@gmail.com க்கு எழுதுங்கள். எங்களது வாட்ஸ்அப் குழுவில் மக்கள் தங்கள் படைப்புகளை பகிர்ந்துகொண்டு விவாதிக்கிறார்கள். இந்த குழுவில் சேர, உங்கள் கைபேசி எண்ணை மின்னஞ்சலில் சேர்க்கவும்.