München Tamil Academy
தமிழ் கல்விக் கழகம்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்” –
என்ற பாரதி பாடிய தமிழ் மொழியின் பெருமையையும் சிறப்பையும் வளர்க்கும்பொருட்டு முன்சென் தமிழ் கல்விக்கழகம் என்ற துணை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. உலகில் பழமையான மொழிகளில் இன்றும் தொடர்ச்சி நிலையில் உள்ள மொழி தமிழ் மொழி. மொழியின் சிறப்பு பழமையில் மட்டும் அல்லாது இன்றளவும் பேச்சு வழக்கில் இருந்து வருவதும் ஆகும். இவ்வாறு தொடர்ந்து தமிழ் மொழியில் படைப்புகள் உருவாவதும் வருவதும் வேற்று மொழி புத்தகங்கள் தமிழாக்கப்படுவதும் தமிழின் தொடர்ச்சி நிலைக்கு முக்கியமான காரணிகள். ஆயினும் உலகமயமாக்கப்பட்ட சூழலில் மக்கள் முன்பு இல்லாத அளவு இடம் பெயர்ந்து வாழும் நிலை உருவாகி உள்ளது. தமிழர்கள் பல நாடுகளில் வசித்து வருகின்றார். அவர்களுடைய சந்ததியினர் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியால் தாய் மொழியான தமிழை கூடுதலாக முறையே கற்றும் வருகின்றனர். மொழி தேர்வுப்பாடமாக மட்டும் அல்லாமல் வகுப்பறை சூழலில் உயிரோட்டத்துடன் மகிழ்வூட்டும் செயல்முறைகள் மூலம் வாழ்வியல் சம்மந்தப்பட்ட கூறுகளையும் சேர்த்து கற்பிக்கும் போது மொழி கற்பிக்கும் முறை மேன்படுகிறது. மாணவரக்ளின் மொழி பற்று பன்மடங்கு பெருகுகிறது. இந்த கோட்பாட்டின் கீழ் முன்சென் தமிழ் சங்கம் தமிழ் பயிற்றுவிக்கிறது.
கல்விக் கழகத்தின் சிறப்பம்சங்கள்:
- ஜெர்மனியில் வாழும் நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை, ஜெர்மன் அரசாங்கத்தின் உதவியுடன் அரசு பள்ளி வளாகத்தில் தமிழ் பாடம் முறையாக கற்று கொடுப்பது.
- தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் உதவியின் கீழ்பாடப்புத்தகங்களை பெற்று தமிழ் பயிலும் மாணவர்களுக்கு விநியோகித்து அவர்கள் முறையாக இலகுவாக தமிழ் கற்க உதவி புரிவது.
- தமிழ் இணைய கல்விக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் அவர்களின் ஜெர்மானிய கிளையாக செயல்படுவது.
- தமிழ் கற்கும் நாட்டம் உடைய மற்றோருக்கும் இலக்கிய மற்றும் பட்டய படிப்பு பயில்வதற்கான உதவிகளை செய்வது.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
– பாரதியார்
München Tamil Academy is an humble effort by München Tamil Sangam e.V. to provide a systematic learning programs and courses for the benefit of Tamil Community in Munich. Munich Tamil Academy was inaugurated during the Tamil New Year day celebrations in 2019 after a yearlong effort. The Academy is affiliated to Tamil Virtual Academy, an initiative by Government of Tamil Nadu, India. The city council of Munich, supports this initiative of München Tamil Academy with infrastructure by providing classrooms at Grundschule an der Schwanthalerstraße. Currently, the school organisers Tamil courses at 3 levels, for children aged 4 and above.