வருது வருது தமிழ் தையது வருது
கிழிஞ்சு போன மனுச மனச
தச்சு சேக்க தய்யி வருது
நஞ்சு போன பொழப்பயெல்லாம்
நிமித்தி வெக்க தய்யி வருது

மனுச ஜாதி வெதைச்சு வெச்ச
வம்பெல்லாம் வெனையாக
வெதையெல்லாம் பயிராச்சு
வைரஸா உயிராச்சு

உசுரான நாள் மொதலா
உசுரெடுக்க ஆர்மபிக்க
ஊரெல்லாம் முடங்கி போச்சு
துக்கத்துல தூக்கம் போச்சு

கம்மா நெறஞ்சு காடு வெளைஞ்சு
மண்ணுல போட்டதெல்லாம்
மச மசன்னு வளந்து நிக்க
முடிஞ்சு போச்சு மார்கழி
விடிஞ்சு எந்திரிச்சா தய்யி

கொத்து கொத்தா கிழங்கு மஞ்ச
சேறு கலைய கழுவி வெச்சு
பக்கத்துல பக்குவமா
கெட கரும்ப சாத்தி வெச்சு
அடுப்ப கூட்டி பான வெச்சு
பச்சரிசி வெல்லம் போட
வெந்து வரும் அரிசியால
நொந்து போன மனசு பூரா
தெம்பால ரொம்பி போச்சு

தேக்கி வெச்ச துக்கமெல்லாம்
நெய்யி போல கரைஞ்சுபோக
போன காலம் போகட்டும்னு
பொங்கிருச்சு பொங்கலு

மாடும் வீடும் ஒன்னு கூடி
கெழக்க பாத்து கும்புட
கவலையெல்லாம் கலையட்டும்,
கண்ணு தண்ணி வத்தட்டும்
நாசமது நிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்

பொங்கலோ பொங்கல்!!

 

 

Pic courtesy: ramblerwithoutborders