எழில் கொஞ்சும் முன்சென் நகரம் 1158ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. நதிகளை முன்னிறுத்தியே ஐரோப்பாவின் பெரும்பான்மையான நகரங்கள் நிறுவப்பட்டது, அவ்வழியே ஈசார் நதியை மையமாகக் கொண்டு முன்சென் நகரம் நிறுவப்பட்டது. München,  என்ற பெயர்  Mönch என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. Mönch என்றால் (Monk) துறவி என்று அர்த்தம். பழங்காலத்தில் அதிகமான துறவிகள் இங்கு வசித்து  வந்ததே இதற்கான காரணம். முன்சென் நகரமானது 1175 ஆம் ஆண்டு முன்சென்  என்ற பெயருடன் தன்னை அதிகாரப்பூர்வமான நகரமாக மேம்படுத்திக் கொண்டது!

முன்சென்  நகரத்தின் சிறப்பம்சங்கள் – Marienplatz, Frauenkirche, Neues Rathaus, Viktualienmarkt, English Garden, Olympia Park, BMW Welt and Museum , Technical Museum, Neuschwanstein castle  இன்னும் இன்னும் ஏராளம்!!

முன்சென் நகருக்கு மேலும் அழகு சேர்த்திட வந்த தமிழ் பட்டாம்பூச்சிகளுக்கு இதயம் கனிந்த வணக்கம்! நம் உலகம் அன்பால் விரியட்டும்! நகரத்தின் சிறப்பு அம்சங்களையும் அதன் தனித் தன்மையையும் மேலும் விரிவாக காண்போம்…

மரியன்ப்லாட்ஸ்

Marienplatz
முன்சென் நகரின் மையம் Marienplatz. முன்சென் நகரின் பெரும்பான்மையான சிறப்பம்சங்களை தன் வசம் வைத்துள்ளது Marienplatz.

 • Mariensäule:
  மரியென்ப்ளட்ஸ்ல் மிகப்பெரிய தூணின் மீது அமைக்கப்பட்ட மரியா சிலையாகும். இந்த மரியா பவேரியாவை காத்தருளும் தாயாக வணங்கப்படுகிறார்.
 • Neues Rathaus:
  City Council மற்றும் மேயர் அலுவலகம் இதன் ஒரு பகுதியாக உள்ளது. Neues Rathaus கோபுரமானது அனைவரின் கண்களை ஈர்க்கும் வகையில் Rathaus-Glockenspiel (  நடனமாடி கதை சொல்லும் சிலைகள்) அமைக்கப்பட்டுள்ளது.
 • Rathaus-Glockenspiel:
  முதல் தளத்தில் Duke Wilhelm V திருமண நிகழ்வுகளை கதையாக சொல்கிறது. Rathaus-Glockenspiel இரண்டாம் தளத்தில் Schäfflertanz ஆடும் சிலைகளைக் காணலாம். 1517 ஆம் ஆண்டு முன்சென் நகரம் பிளேக் நோயிலிருந்து விடுபட்டதற்காண நம்பிக்கை நடனம்  Schäfflertanz. (இன்றும் பாரம்பரிய உடை அணிந்து Fasching போது   Schäfflertanz ஆடுபவர்களை காணலாம்). நிகழ்ச்சியின் முடிவில் Glockenspiel மேற்கூரையில் தங்க சேவல் மூன்று முறை கொக்கரிக்கும்.


  நிகழ்ச்சி  நேரம்:11 am, 12 pm மற்றும் 5 pm (Nov  முதல் Feb வரை 5 pm நிகழ்ச்சி கிடையாது).


 • Frauenkirche:
  பவேரியா மாநிலத்தின் தலைமை கத்தோலிக் தேவாலயமாகும். பதினைந்தாம் நூற்றாண்டில் 20 ஆண்டு கால உழைப்பில் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயம் ஆகும். பவேரியா தலைநகரத்தின் பிரசித்தி பெற்ற சின்னமாக கருதப்படுகிறது. Münchner Dom” (Munich Cathedral) என்றும் கூறுவர். தேவாலயத்தின் சிறப்பு அம்சமே இதன் இரட்டைக் கோபுரங்கள் ஆகும்.இரு கோபுரங்களும்  சம அளவு உயரம் உள்ளது போல் காட்சி தரும் ஆனால் ஒரு கோபுரமானது சற்றே உயரம் சிறியது.கோபுரத்தின் மேற்பகுதி onion போல    தோற்றமுடையது     ஆகையால் onion top என்றும் அழைப்பர். Marienplatz பகுதியில் Frauenkirche கோபுரத்தின் உயரத்தை தாண்டி எந்த ஒரு கட்டிடமும் உயரமாக கட்டக் கூடாது என்ற விதி இன்றும் நடைமுறையில் உள்ளது. திறக்கும் நேரங்கள்: 7.00 முதல் 19.00 வரை,வியாழக்கிழமை  20.30 வரை, வெள்ளிக்கிழமை 18.00 வரை. நுழைவு கட்டணம்: இல்லை
 • Viktualienmarkt:
  முன்சென் நகரின் உழவர் சந்தை என்று சுருக்கமாகக் கூறலாம். ஆரம்ப காலகட்டத்தில் இது சிறிய சந்தையாக இருந்தது. விவசாய வணிகச் சந்தையை   மேம்படுத்துவதற்காக, King  Maximilian I அப்பகுதியில் கட்டிடங்களை  தகர்த்த கட்டளையிட்டு சந்தையை விரிவுபடுத்தினார். 200 ஆண்டுகளுக்கு மேலான ஒரு பாரம்பரிய சந்தையாக  இன்றும் பெயர் பெற்று விளங்குகிறது. victuals என்றால் லத்தின் மொழியில் உணவு என்று அர்த்தம் Viktualienmarkt என்றால் உணவு சந்தை. இவ்விடத்தில் பழங்கள், காய்கறிகள், இறைச்சி, cheese, மீன்,  மசாலா, மலர்கள் மற்றும் பல அரியவகை பொருட்களும் கிடைக்கின்றன. பழங்கால பாரம்பரிய சந்தையை நகரத்தின் மையத்தில் வைத்ததற்கே கூடுதல் பாராட்டு.
 • Juliet Capulet Statue:
  ‘’O, she doth teach the torches to burn bright” என்று Romeo  வர்ணித்த பேரழகி Juliet முன்செனில் ஒளிவீசும் சிலையாய் நிற்கிறார்.‘’In fair VERONA, where we lay our scene’’
  என்று Shakespeare, Romeo Juliet நாவலை தொடங்கியிருப்பார். ஜூலியட் கபுலட் சிலை 1974 ஆம் ஆண்டில் VERONA (Italy) நகரத்திலிருந்து முன்சென் நகரத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது.

U-Bahn மற்றும் S-Bahn: Marienplatz அல்லது Karlsplatz.


இங்கிலிஷ் கார்டன் (English Garden)

English Garden
உலகிலேயே மிகப்பெரிய நகர்ப்புற பூங்காக்களில் ஒன்றாக English Garden உள்ளது. நியூயார்க் சென்ட்ரல் பார்க் மற்றும் லண்டனின் ஹைட்பார்க் விட பெரியது. 3.7 கிமீ 2 (1.4 சதுர மைல்) பரப்பளவு உடையது. இங்கே பலர் பலவிதமான விளையாட்டு பயிற்சிகள் செய்வதைக் காணலாம்.இதன் சிறப்பம்சங்களாக.

 • ஜப்பானியர் தேநீர் விடுதி (Japanese Teahouse):
  இது ஒரு சிறிய தீவு போன்ற அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய ஜப்பானிய தேநீர் விழா இங்கு வழக்கமாக நடைபெறுகிறது.
 • அலை சருக்குதல் (Surfing):
  செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட அலைகளில் Surfing விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் இங்கு காணலாம்.
 • பெஞ்சமின் தாம்சன் (Benjamin Thompson) நினைவுச் சின்னம்
  பெஞ்சமின் தாம்சன் நினைவுச் சின்னம் உள்ளது. இவரால் உருவாக்கப்பட்டதே English Garden.
 • Monopteros:
  ஒரு சிறிய குன்றின் மீது கிரேக்க நாட்டுப் பாணியில் அமைக்கப்பட்டகோவில்.
 • சீன கோபுரம் மற்றும் பீர் தோட்டம் (Chinese Tower and Beer Garden): 1790 ல் பொழுதுபோக்கு அம்சத்திற்கு அமைக்கப்பட்டது Chinese Tower. ஐந்து அடுக்கு மாடிகளைக் கொண்ட மர கோபுரமாகும். 1944 ல் இரண்டாம் உலகப்போரின் போது அழிக்கப்பட்டது. பிறகு1952 ஆம் ஆண்டில் கோபுரம் புதுப்பிக்கப்பட்டது. Chinese Tower Beer Garden   முன்செனின் இரண்டாவது மிகப்பெரிய Beer Garden. 7500 உணவருந்தும் இருக்கைகள் உள்ளன.
 • ருமபோர்ட அரங்கம் (Rumford-Saal):
  Military hall ஆக இருந்தது. தற்போது children’s centre ஆக (“Kinderfreizeitstätte”) செயல்பட்டு வருகிறது.
 • கிளெய்ன்ஹெஸ்ஸேலோஹிர் ஏரி (Kleinhesseloher See):
  3 தீவுகளை (Königsinsel, Kurfürsteninsel, Regenteninsel) உள்ளடக்கி செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஏரி.

Image Attribution:

பலன் பாராது இந்தக் கட்டுரைக்கு உதவிய நிர்மல் ராமன் அவர்களுக்கும், பாலா அவர்களுக்கும் எனது நன்றிகள்.