ஐந்தாவது பாட ஏடு என் கையில்
முதல் பக்கம்
நம் தேச தந்தை
அறியாமை பாவம் என்றார்.
நிறைய பிழைகள் செய்தேன்
அறியா வயது என்றாள் அன்னை.
அகவை நாற்பதை கடந்தேன்
என் மகன் பிழைகள் புரிய
என் மனைவி அறியா வயது என்றாள்.
பேராசிரியர் என கல்லூரி அழைத்தது என்னை
கெட்டிக்காரன் என பெருமிதம் கொண்டாள் அன்னை.
கணவன் அறிவாளி என கர்வம் கொண்டாள் மனைவி.
பிணி மூப்பு சாவு கண்டு
அரச வாழ்வை துறந்து ஞானம்
பெற்ற புத்தரின் போதனைகள் கற்றேன்.
என் அன்னைக்கு உடல் படுத்த
வயோதிகத்தில் இது சகஜம் என்றாள்
மருத்துவர் பிணிக்கு மருந்து இல்லை
வலியில்லாத முடிவுக்கு முயல்வோம் என்றார்.
என் அறிவும் மருத்துவமும் கைகட்டி
அவள் வலியுடன் இறுதி யாத்திரை செல்வதை
வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது
இழப்பை தடுக்க முடியவில்லை
பிரிவை தவிர்க்க முடியவில்லை.
பிரபஞ்ச பேராற்றல் முன் சிறுதுளி நான் !
அறிவோ, அறியாமையோ அணுவினும்
நுண்ணிய துகள் என தெளிந்தேன்.
படம்: Galaxy 1 by Cliff Howard Artist with license
Leave A Comment