தன் உதிரத்தால் உயிர் கொடுத்து
வியர்வையால் என் உடல் வளர்த்து
என் பலவீனங்களை தாங்கும் வேலியாய்
அறிவை அயராது வளர்க்கும் ஆசானாய்

மறைவில் சுற்றத்திடம் எனை புகழ்ந்து
நேரில் இன்னும் உயரம் என பணித்து
அறமும் அன்பும் என் ஆழத்தில் பதித்து

தான் எதிர்பாரா உயரம் நான் பறக்க
பெருமிதமும் கண்ணீருமாய் கடவுளை வணங்க
வேலை முடித்த திருப்தியில் கண்ணுறங்க
எனை செதுக்கிய என் தேவனின் சாம்பலை
கடலில் கரைத்து நான் கரைந்தேன்

படம்: Father, Daughter by amboo,who? with license