வான் நிலவே வளர் பிறையே
புல் வெளியே வெண் பனி மழையே

இயங்கிய காலம் உறங்கி கிடந்து
மரிக்கும் நொடியில் மயக்கம் தெளிந்து
இருக்கும் போது மறந்த உண்மை
இறக்கும் போது உணர பெற்ற
கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா
கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா

கருப்பை விடுத்த நொடி முதல்
இருப்பை தேடி திரியும் உலகில்

தவழ்ந்து துவண்டு
எழுந்திட தவிப்பு

நின்று வென்றதும்
நடந்திட தவிப்பு

ஓரடி வைத்ததும்
ஓடியாட தவிப்பு

மூப்பது தொடங்கும் வரை
தவிப்புகள் முடியவில்லை

முடிவொன்று இருப்பதை மறந்து
முடிவில்லா ஆசைகள் கொண்ட என்

கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா
கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா

சுமந்த மடியில், விழுந்த நொடி முதல்
வென்றிட முயன்றேன்

மழலையாய் அழுகை கொண்டு
பசியை வெல்ல

மூவாரில் காதல் கொண்டு
காமத்தை வெல்ல

முதுமையில் பொறுமை கொண்டு
வெறுமை வெல்ல

வென்று முடிக்கும் வேகத்தில்
கொன்று புதைத்தேன் வாழ்வதனை

புனைந்த பொருளுரை பொருளற்று போனதை
மூப்பில் முடிவுரை வரையும் போது உணர பெற்ற

கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா
கதை கேட்க வா என் கல்லறை நோக்கி வா…

 

 

படம்: Is Life shaped Like a Tree? by Tommy Clark with license